Tuesday, September 22, 2009

நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி-மதிமாறன் ஆவேசம்



பொதுவாக மதிமாறன் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வது கிடையாது.படித்து விட்டு சும்மா சிரித்து விட்டு நகர்ந்து விடுவது வழக்கம்.எப்பொழுதாவது பின்னூட்டம் மட்டும் உண்டு.ஆனால் வர வர வாய்ச் சவடால் வீரரின் அக்கப் போர் அதிகம் ஆகிக் கொண்டே போவதால் இந்த பதிவு.வழக்கம் போல இதற்கு பதில் எதும் கூறாமலோ அல்லது கண்டும் காணாமலோ அல்லது சில்லறைகள் என்று சில்லறைத்தனமாக உளறாமலோ பதில் கூறுங்கள் மதிமாறன் அவர்களே!

விடை தெரியாத சில கேள்விகள்.

//தமிழ் பத்திரிகையாளர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான சில உணர்வாளர்கள்கூட, தங்கள் உணர்வை இணையங்களில் ரகசியமாக புனைப் பெயர்களில்தான், பகிர்ந்து கொண்டார்கள்.ஆபிசுக்கு தெரிஞ்சா பிரச்சினை.. யாருக்கிட்டயும் சொல்லாதீங்கஅதை எழுதுனது நான்தான்…’ என்கிற பாணியில்-எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்இதுதாண்டா தமிழ் பத்திரிகைதமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்-பதிவில்//

அவ்ர்களாவது பரவாயில்லை.

.மதிமாறன் என்றாவது ஈழப் போராட்டம் பற்றியும்,அவர்களின் போராட்டத்திற்க்கான தேவை குறித்தும் ஒரு வரி எழுதி இருக்கிறாரா?போனது போகட்டும்.இப்பொழுதாவது பதில் சொல்லட்டும். எதிலும் மூக்கை நுழைத்துக் கருத்து சொல்லும் மதிமாறன் அவர்களே முதலில் இதில் கருத்துச் சொல்லுங்கள்!

அ)விடுதலைப் புலிகள் குறித்து மதிமாறன் கருத்து என்ன?

ஆ)விடுதலைப்புலிகள் நடத்தும் ஆயுதப் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சும்மா வெட்டியாக வழவழ வார்த்தைகளில் முற்போக்கு பேச வேண்டாம்.பளிச்சென்று சொல்லுங்கள்.இதில் உங்கள் கருத்து என்ன?

//சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கிறதுஎன்று ஆதாரத்தோடு எழுதிய, சிங்களப் பத்திரிகையாளர்களை சிங்கள அரசு கொன்றது. தமிழர்களுக்காக மனிதாபிமானம் கொண்ட அந்தசிங்களவர்கள்தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.///

மதிமாறன்அறிவுப்படி சிங்களர்கள் மட்டுமே போராடினார்கள்.தமிழர்கள் சும்மா கிடந்தார்கள். தமிழ்ப் பத்திரிக்கைகள் சோரம் போனார்கள்.நம் கேள்வியெல்லாம், மதிமாறன் என்ன தியாகம் செய்தார்?மதிமாறன் எதுவுமே பண்ணலையே?இவ்வளவு ஏன்?மதிமாறன் தினகரனில் வேலை பார்க்கும் போது அப்பொழுது நாட்டில் நிகழும் பிரச்சனை குறித்து ஏதாவது புரட்சிகர கட்டுரை எழுதி உள்ளாரா?இல்லை புரட்சிகரச் செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளாரா?பதில் தேவை அய்யா!பதில் தேவை!

//ம.கஇகவின் கை ஆள் மதிமாறன்’ ‘( மதிமாறன் எப்பவுமே இப்படித்தான் அவரே உண்மையை ஒத்துக்குவாரு) இப்பதான் மதிமாறனுக்கு சாதி குறித்து தெரியுதா?நாங்க எல்லாம் இரண்டாயிரம் வருசத்துக்கு முந்தியே சாதிய எதிர்த்தவங்கஅப்ப எங்க போயிருந்தார் மதிமாறன்?‘ ‘இந்திய உளவு நிறுவனத்தின் கை ஆள் மதிமாறன்என்று அரசியல் விளக்கமே இல்லாமல், தங்கள் இயலாமையை கோபமாக, கிசு கிசு பாணியில் தனிப்பட்ட முறையில் என் மீது மண்ணை வாரி தூற்றுவதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல?//

கண்டிப்பாக அவதூறுக்கு பதில் சொல்லத் தேவை இல்லை.ஆனால் கண்டிப்பாக குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லத் தான் வேண்டும்.சாதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் சாதி ஒழிப்பாளர் மதிமாறன் அவர்களின் கருத்து என்ன?சாதி ஒழிப்புக்கு மதிமாறன் அவர்களின் பங்களிப்பு என்ன?கண்டிப்பாக எழுதபக்கங்கள் போதாது..ஆனால் கண்டிப்பாக ஒரு வரி எழுதணும்.அது தனிப்பட்ட வாழ்வில் நடைபெற்றதாக இருத்தல் சிறப்பு.ஆனால் அப்படி இருக்காது.ஏனென்றால் எதுவும்போராளிபண்ணவில்லை. வாய்ச்சொல்லில் வீரரடி.என்பது யாருக்கு பொருந்துமோ இல்லை போராளிக்கு கண்டிப்பாக பொருந்தும்.

//ஒரு பெரியார் தொண்டனின் பார்வையில், டாக்டர் அம்பேத்கர் குறித்து நான் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள், அந்தப் புத்தகத்திற்கு விழா எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அவர்களே விழா தேதியையும் சிறப்பு விருந்தினர்களையும் முடிவு செய்து அறிவித்தனர். எல்லோருக்கும் விழா பற்றி எப்போது தெரியுமோ அப்போதுதான் எனக்கும் தெரியும்.//

இதன் மூலம் சகலருக்கும் மதிமாறன் மறைமுகமாக சொல்வது அல்லது சொல்ல விரும்புவது அல்லது தன்னை நோக்கி அனைவரும் கேட்கப்படும் அல்லது கேட்க நினைக்கும், சீமானின் தமிழ் தேசியம் உங்களுக்குப் பிடிக்காது,ஆனால் அவரை ஏன் நீங்கள் விழாவிற்கு அழைத்தீர்கள்,புத்தகம் விற்பனை செய்யும் கீழ்த்தரமான நோக்கம் தானே?என்ற கேள்விக்கான மறைமுகமான பதில் தான் மேலே சொல்லப்பட்டது. ஆனால் இதன் மூலம் நேரடியாக சொல்வது என்னவென்றால், சீமானின் தமிழ் தேசியத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.அதில் நம்பிக்கையும் கிடையாது.ஆனால் நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டாளர்கள் அவரை அழைத்தார்கள்.என்னையும் அழைத்தார்கள்.கலந்து கொண்டேன்.அவ்வளவு தான்.மற்றபடி அவருக்கும் எனக்கும் கொள்கை அளவில் நிறைய வேறுபாடு உண்டு.இது தான் இதைத் தான் இன்னும் கொஞ்ச நாளில் மதிமாறன் வெளிப்படையாகவும், ”வீரமாகவும்பேசுவார்.இப்பொழுது துளியும் மறந்தும் கூட வெளிப்படையாக கூட பேச மாட்டார்.ஏனென்றால் நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்கணுமே?சீமானை வைத்து புத்தகம் விக்கனணுமே?புத்தகம் விற்பதற்கு சீமானும் மணி அண்ணணும்.ஆனால் சேர்ந்து திட்டுவதற்கு ம.க.இ.ககாரன்.நல்லாத்தான் நடக்குது மதிமாறன் அவர்களின் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்சி வியாபாரம்.

இந்த விஷயத்தில் நமக்கு எழும் சில சந்தேகங்கள்.

அ)கொளத்தூர் மணியின் கருத்தும் மதிமாறன் கருத்தும் ஏற்கனவே கடந்த தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிப்பதில் வேறுபடுகிறது.அது குறித்து தனது கருத்தை மதிமாறன் பிளாக்கில் பதிவு பண்ணி விட்டார்.அது குறித்து தலைவருடன் நேரடியாக விவாதம் பண்ணுவதற்கு மதிமாறன் தயாரா?பதில் சொல்லுங்கள்மதிமாறன் அவர்களே?

ஆ)கூட்டத்தின் மற்றொரு சிறப்பு விருந்தினர் சீமான் பேசும் தமிழ் தேசியம் பற்றியும் அவரது நாம் தமிழர் இயக்கம் பற்றியும் மதிமாறனின் கருத்து என்ன?

இ)விடுதலைப் புலிகள் பற்றி புர்ர்ர்ர்ரட்சிகர எழுத்தாளரின் கருத்து என்ன?சீமானின் தலைவர் பிரபாகரன் பற்றி மதிமாறன் கருத்து என்ன?ம.க.இ.க வின் கருத்தில் இருந்து மதிமாறன் கருத்து வேறுபடுகிறதா,இல்லை மதிமாறனின் கருத்தும் அதுவும் ஒன்றா?ஒருவேளை மதிமாறன் கருத்து சீமானின் கருத்துடன் வேறுபட்டால் அது குறித்து விவாதம் பண்ண மதிமாறன் தயாரா?விவாதத்திற்கு மும்பை விழா மேடையை பயன்படுத்த மதிமாறனின்பினாமிநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தயாரா?

ஈ)கொள்கை உடன்பாடு இல்லாத சீமானுடன் ஏன் கலந்து கொண்டீர்கள் என்று எழும் கேள்விக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னையும் அழைத்தார்கள்,சீமானையும் அழைத்தார்கள்.மற்றபடி எனக்கு ஒன்றும் தெரியாது என்று படு முன் எச்சரிக்கையாகப் பதிலைத் தயாராக வைத்துக் கொண்டு பேசும் மதிமாறனிடம் ஒரு கேள்வி இருக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ராமகோபாலனையோ அல்லது இல.கணேசனையோ அழைத்தாலும் இதே பதிலைத்தான் சொல்வீர்களா?அவ்வளவு ஏன்? ஏ.சி.சண்முகம் முதலியார் அவர்களை அழைத்தாலும் இதே பதிலைத்தான் சொல்வீர்களா?

முற்றிலும் மாற்றுக்கருத்து கொண்டவர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது குறித்த உங்கள் கருத்து என்ன?பதில் சொஅல்லுங்கள் அய்யா!பதில் சொல்லுங்கள்!

//தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக இடஒதுக்கீடு, இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்று விஸ்வரூபம் எடுத்து நின்ற டாக்டர் அம்பேத்கரை விமர்சிக்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள் அல்லது அவரை கொண்டாட மறுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம், இந்திய தேசியமா? அல்லது அவர்கள் மனதில் இருக்கிற இந்து ஜாதியமா?//

மதிமாறன் எடுத்ததெற்கெல்லாம் தலித்,அம்பேத்கார் என்று சவடால் பேசித் திரிகிறார்.தமிழ் தேசியவாதிகள் அம்பேத்காரை புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லித் திரியும் மதிமாறன் முதலில் அந்தக் கேள்வியை ம.க.இ.க.வினரை நோக்கிக் கேட்கட்டும்.அவர்கள் ஏன் அம்பேத்காரை ஏற்றுக் கொள்வது இல்லை? என்று கேளுங்கள்.உங்களைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டு அது அப்படி இல்லை தோழர் என்று ஆரம்பிப்பார்கள்,அதன் பின்பு இந்த விவாதம் மணிக்கணக்கில் விடிந்த பின்பும் நீண்டு கொண்டுடுடுடுடுடுடு விடையும் தெரியாமல் கேட்ட கேள்வியே மறந்து,நீங்களும் வீட்டுக்கு போக முடியாது தோழர்.ஆகவே முதலில் அவர்களை முதலில் கேள்வி கேட்டு பதில் பெறுங்கள் தோழர்!அதன் பின்பு தமிழ் தேசிய வாதிகளை ஏன்? என்று பின்னிப் பெடலெடுப்போம் தோழர்!

ஆகவே ஊரெல்லாம் கேள்வி கேட்கும் மதிமாறன் முதலில் மேற்கண்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்கள்.அல்லது உண்மைகளை ஒத்துக்கொள்ளுங்கள்.அதன் பின்பு மற்றவை பேசுவோம்.இந்த கேள்விக்கு பதில் சொல்லப்படவில்லை என்றால் மதிமாறன் கட்டிடம் ஸ்ட்ராங்கு பட் பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்க்கு என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கும்....

1 comment:

Anonymous said...

//கட்டிடம் ஸ்ட்ராங்கு பட் பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்க்கு என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கும்....//

This is a compliment indeed.

As I understand, dalits of India take only Ambedkar as their leader although they may be scattered across many parties as vote banks - that is for survival.

For principles and credo for struggle, it is Ambedkar who is their beacon light. His words, his challengers, his life - are their leading lights.

So also, in TN. The dalits are scattered. Yet, they take Ambedkar as their guardian angel. The Tsmil dalits have rejected Periyaar as they have are believers in God. The propoganda against periyaar unleashed by paarpparnar lobby that he was only for BCs, have achieved its result, namely, estranging dalits from periyaar.

I have been reading Madhimaaran, Ekalaivan, Dalit Murasu, Ravikumar and othe dalit voices of TN. They hate paarppanars being their ancient and ever lasting enemies. They, however, dont express it in writing or on stage because, in today world, the ancient values of brahmins calling dalits untouchables etc. have no takers even among paarppanars. Their untouchability is today meaningless to others. Dalits dont care parpparanars. This attitude of not disturbing paappanars have misled paarppanars to believe that the dalits dont hate them.

The dalits have not gone to the side of other side also.

In short, dalits stand alone - as all things to all men. Even paarppanars are pretending to be their friends.

You use this mirror to see Madhimaaran. If you do, you will understand why he is so angry with paarppanars. It is not an individual angst, but a community angst - common to all of them from that community.

About his tryst with Eelam etc. my above comments are irrelevant. I dont know, nor want to know.

What is your position? Where do you stand?




Post

Post a Comment