Thursday, September 3, 2009

பாண்டிமட எழுத்தாளரின் பஜனை

தனக்குத்தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக்கொள்ளும் எழுத்தாளரின் சமீபத்திய கேள்வியும் அதற்கான பதிலையும் படித்தபோது புல்லரிப்பே வந்துவிட்டது.

அந்த கேள்வி இதுதான் நீங்கள் ஏன் உங்களைப் பற்றிய விமர்சன கட்டுரைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்வதில்லை ?

நம் எழுத்தாளர் சொல்லியிருக்கும் பதிலை பார்த்தவுடன் உடனே அதற்கு ஒரு மறுமொழி எழுதாவிட்டால் பாரதி கல்லறையில் இருந்து எழுந்து வந்து நம்மை உதைத்துவிடுவார் என்று கருதியதால் இந்த பதிவு. :))

மறுப்பு சொல்ல வேண்டிய அளவுக்கு அருகதை இல்லாததால்இவர் பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லையாம்.

விமர்சிக்க கூட தகுதியற்ற அவரின் எழுத்துக்களுக்கு இந்த அளவுக்கு மெனக்கெட்டு முக்கியத்துவம் கொடுத்து பின்னூட்டம் போடும் அப்பாவிகளை நினைக்கத்தான் நமக்கு கவலையாக இருக்கிறது.
( பின்னூட்டம் இட கூட தகுதி இல்லாத பதிவு என்பது வேறு விஷயம்)
அடடா இப்போதுதான் நினைவுக்கு வருகிறது பெரும்பாலான பின்னூட்டங்களையும் அவரே போட்டுக்கொள்வதை மறந்துபோய்விட்டோம்!!

கிசுகிசுத்தனமாக அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்களைநாமும் தவிர்த்துவிட்டு சில விசயங்களை பார்க்கலாம்.

ம.க.இ.க வி.ன் கையாள் மதிமாறன் என்று இவரை திட்டுகிறார்களாம் அட பெருமைப்பட்டுக்கொணடு இருக்க வேண்டிய விசயத்துக்கு போய் ஏன் இவர் அலுத்துக்கொள்ளுகிறார்.
உலகத்திலேயே தங்களை விட புர்ர்ரர்ச்ச்ச்சீகாரர்கள் இல்லை, என்றுசொல்லும் மருதையன் கலை இலக்கிய கழகத்துக்கு ஏஜெண்டாக இருப்பது எவ்வளவு பெருமிதத்துக்குறிய விசயம்.

அதைவிட்டுட்டு இப்படி மெகா சீரியல் ஹீரோயின் போல கண்ணை கசக்கிகிட்டு இருக்காரே நம்ம எழுத்தாளார்.

பெரியாரின் தொண்டனின் பார்வையில் டாக்டர் அம்பேதகர் குறித்து இவர் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள் விழா எடுக்க முடிவு செய்து இவருக்கு சிறப்பு விருந்தினர்களையும் அறிவித்தார்களாம்.

யார் அந்த அப்பாவிகள் எந்த பள்ளியில் எத்தனாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்களோ யாமறியேன் பாராபரமே!!

என் இனிய நண்பர்களே கொளத்தூர் மணியிடமும் சீமானிடமும்போய் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக புலம்பிவிட்டு !!
ஆண்டவனே என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்றுஎதிரிகளை நானாக கவனித்துக் கொள்ளுகிறேன் என்று ஒரு இறை நமபிக்கையாளர் புலம்பியதுபோல தானும் புலம்ப முடியுமா என்று கேட்கிறார்.

என் இனிய நண்பர்களே என்று எதிரிகளை விளிக்கும் இவருக்குநண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்று அந்த ஆண்டவன் குழம்பிபோய் கோவணத்தை அவிழ்த்துக்கொண்டு திரியாமல்இருந்தால் சரி.

பேசாத எழுதாத விசயத்துக்கு வலிந்துபோய் கொளத்தூர் மணியிடமும் சீமானிடமும் விளக்கம் கொடுக்க விரும்பாத இவர் ஏன் பதிவு எழுதி தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ?

கொஞசம் ம.க.இ.க கொஞசம் பெரியார் கொஞ்சம் அம்பேத்கர்என்று லவட்டிப்போட்டி சுயசிந்தனையின் அடையாளமே இல்லாத இவரின் எழுத்துக்களுக்கு அரசியல் ரீதியானவிமர்சனம் செய்ய இயலாதவர்கள் காழ்ப்புணர்சியால்வதந்தியை பரப்புகிறார்களாம்? பொறாமை உணர்வு நெருங்கிய நண்பர்களிடமும் உறவினர்களிடமும்தான் வேலை செய்யுமாம்.

முதலில் சுயபச்சாதாபத்தையும் கழிவிரக்கத்தையும்தவிர்த்துவிட்டு உண்மையாக வளர முயற்சி செய்யுங்க எழுத்தாளரே
பாரதிக்கே மறுப்பு எழுதிய எனக்கு இவர்களுக்கு மறுப்புஎழுதுவதா முடியாது என்று ஒரு சவடால் வேறு அடிக்கிறார்?

செத்து போனவர் திரும்ப வந்து மறுப்புக்கு மறுப்பு எழுத மாட்டார் என்கிற தைரியம் தானே மதிமாறரே ?

நல்ல வேளை பாரதியோடு நிறுத்தி கொண்டார். ,கே.பி . சுந்தராம்பாளை இழுக்கவில்லை. ( சுந்தராம்பாளை அம்பல படுத்திய (?) பதிவு உலக பிரசித்தி பெற்றது )

மறுப்பு என்பது ஒரு நபரின் கருத்தையோ கட்டுரையையோ மறுத்துஎழுதுவது.

ஆய்வு என்பது புறநிலை பார்வையுடன் ஒரு எழுத்தாளரின் கருத்துகளைஆய்வு செய்து நிறை குறைகளை அலசி முன்வைப்பது.

பாரதியை ஆய்வு செய்தாரா? பாரதிக்கு மறுப்பு எழுதினாரா இவர் ?இவருக்கே குழப்பம் இன்னும் தீரவில்லை போல இருக்கிறது.
செத்துபோனவருக்கு மறுப்பு எழுதும் உங்கள் துணிவை எப்படிபாராட்டினாலும் தகும் எழுத்தாளரே!!

தந்தை பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவதூறு பரப்பினார்கள். ஆனால் அவைகளை ஒரு பொறுட்டாகவே மதித்ததில்லை தலைவர் பெரியார்.
பெரியாரை ‘தமிழனல்ல கன்னடன்’ என்று தமிழ்த்தேசியவதிகள், தமிழறிஞர்கள் அவதூறு செய்தபோது மட்டும் தலைவர் இப்படிக் கேட்டார்:

“தமிழர்களே! அட, மானங்கெட்ட தமிழர்களே! முதன் முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் ஒரு மலையாளி டி.எம். நாயர். அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கி தன் பொருளையெல்லாம் இழந்தவன் ஒரு தெலுங்கன் சர்.பி.தியாகராய செட்டியார். தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள்?”

-விடுதலை நாளிதழ் -

இந்த துணிச்சல், நேர்மை யாருக்கு வரும்?

தமிழர்களை ஏமாற்றி,‘தமிழா நீ ஆண்ட பரம்பரை. இன்று அடிமைப்பட்டு கிடக்கிறாய்’ ‘தமிழ் இனம் உலகத்தின் மூத்த இனம்’ ‘தமிழ் என் மூச்சு’ என்றெல்லாம் ஏற்றி பேசி, தமிழர்களிடம் செல்வாக்கு பெற்று, தலைவனாக மாறி நாட்டையே பிடித்தவர்கள் மத்தியில், தமிழர்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதை போன்ற இப்படி ஒரு பதிலை தலைவர் பெரியாரைத் தவிர வேறு யாரால் தர முடியும்?

உங்களாலும் கொடுக்க முடியும் என்று சொல்லிஉங்களைப் பெரியாரின் இடத்தில் வைத்து பெருமைப்படத் துடிக்கிறீர்களா?

அற்பவாதி, லும்பன், மாங்காமடையன், மாமா பையன் என்கிற வார்த்தையை whole sale-ல் டீலர் எடுத்து ஸ்டாம்பேடில் குத்தி on the way -ல் போகிற வருகிறவர்களுக்கு எல்லாம் இலவசமாக குத்திகொண்டிருக்கும் ம.க.இ.க வினரை பக்கத்தில் வைத்துக்கொண்டு இப்படிபேச உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

தனக்கு வசதியாக அம்பேத்கரை இவர் இழுப்பதைக் கண்டுதான் நமக்கு கோபம் ஏற்ப்படுகிறது.

ஒரு அனாமதேய ஆத்மாவாக இல்லாமல் மாகாத்மாவேஎனக்கு எதிராளியாக இருப்பதால் அவர் முன்வைத்தவழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்று அம்பேத்கர் கூறியதை தனக்கு துணையாக அழைக்கிறார்.

யார் வேண்டுமானாலும் துண்டுச்சீட்டில் கேள்வி எழுதிக்கொடுங்கள் என்று கூட்டங்களில் அறிவித்து வரும் கேள்விகளுக்கு பெரியார் பதில் சொன்னது நமக்கு தெரியும். வரும் கேள்விகள் அணைத்தும் நேர்மையானதாக இருந்தது என்று கூற முடியாது.ஆனால் அத்தனைக்கும் பதில்சொல்லிக்கொண்டிருந்தார் பெரியார்.

இந்த பெரியார் தொண்டர் அம்பேத்கரைப் பற்றி என்ன எழுதியிருப்பார் என்று நினைக்கையில் தலைசுற்றலே வந்துவிடுகிறது.

எழுத்தாளர் அம்பேத்கார் பாதை , பெரியார் பாதை, எல்லாம் பின்பற்றட்டும் ஆனால் அவரது பதிவை படித்துவிட்டு “ எங்கே செல்லும் இந்த பாதை” யை நோக்கி வாசகர்கள் செல்லவேண்டிய காலம் வெகு தூரம் இல்லை.
வெவ்வேறு சூழ்நிலைகளில் தங்கள் ஆளுமைகளுக்கும்தனிப்பட்ட கொள்கைகளுக்கும் ஏற்ப் நடந்துகொண்டபெரியார்,மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களைதனது வசதிக்கு ஏற்ப பயன்படுத்த முயலுவதில்கூட தோல்வி காணும் நம் மதிமாறர்ர் என்ற வீரர், தீரர் , சூரரை பாண்டிமட பஜனை எழுத்தாளர் என்று அழைத்தது தவறே இல்லை என்கிற முடிவுக்குதான் வந்துசேர முடிகிறது.

குறிப்பு ) :-
என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா என்று வரும் நன்பர்களும் ”தோலர்”களும் பின்னூட்டம் இடலாம்.

2 comments:

Anonymous said...

அப்படியா

Anonymous said...

thairiyam iruntha v.mathimaaram wordprass vaada naaye

by
chellam

Post a Comment