Tuesday, September 22, 2009

இது தாண்டா இந்திய தேசிய புரச்ச்ச்சீ

பாரதிய கிழி,
பார்ப்பான ஒழி,
காந்திய அம்மணமாக்கு,
கிருஷ்ணன போட்டு தாக்கு,
பொழப்பு இல்லைனா பிளாக் எழுது,
உனக்கு புரியாம 4 கவித எழுது,
எனக்கும் புரியாம 5 பதிவு போடு,
ஆப்பிரிக்கா டீவி க்கு பேட்டிய குடு
அத அப்படியே கேசட்டு போடு,
கேள்வி பதில் பதிவு எழுது,
மறக்காம கேள்விய நீயே கேளு,
திராவிடன கேள்வி கேளு,
தமிழன் மூஞ்சில கரிய பூசு,
இந்தியன நாறடி,
விக்கலைனாலும் 6 புக் எழுது,
முன்னுரை கேவலம்ன்னு சொல்லு,
விளம்பரத்துக்கு பெரிய தலைய புடி,
உலக புரச்சிக்கு காப்பிரைட் வாங்கின ம.க.இ.க
கூட சேந்து பல்ல இளி
தமிழன அழி,
வர்க்கம் பேசு,
முதலாளித்துவம் , ஏகாதிபத்தியம்ன்னு ஒளரு
அம்பேத்கர brand பண்ணு
பெரியார கூட சேத்துக்கோ
மொக்கையா எழுது
ஒன்னும் இல்லைனா மீள்பதிவு போடு

இப்படியே பண்ணு – மச்சி
வந்துடுச்சுடா இந்திய தேசிய புரச்சி


பெயரில் மதி சேர்த்து கொண்டு எழுத்தில் சுதி இல்லாத என் தங்க தலைவனுக்கு

நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி-மதிமாறன் ஆவேசம்



பொதுவாக மதிமாறன் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வது கிடையாது.படித்து விட்டு சும்மா சிரித்து விட்டு நகர்ந்து விடுவது வழக்கம்.எப்பொழுதாவது பின்னூட்டம் மட்டும் உண்டு.ஆனால் வர வர வாய்ச் சவடால் வீரரின் அக்கப் போர் அதிகம் ஆகிக் கொண்டே போவதால் இந்த பதிவு.வழக்கம் போல இதற்கு பதில் எதும் கூறாமலோ அல்லது கண்டும் காணாமலோ அல்லது சில்லறைகள் என்று சில்லறைத்தனமாக உளறாமலோ பதில் கூறுங்கள் மதிமாறன் அவர்களே!

விடை தெரியாத சில கேள்விகள்.

//தமிழ் பத்திரிகையாளர்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான சில உணர்வாளர்கள்கூட, தங்கள் உணர்வை இணையங்களில் ரகசியமாக புனைப் பெயர்களில்தான், பகிர்ந்து கொண்டார்கள்.ஆபிசுக்கு தெரிஞ்சா பிரச்சினை.. யாருக்கிட்டயும் சொல்லாதீங்கஅதை எழுதுனது நான்தான்…’ என்கிற பாணியில்-எரியிற வீட்ல புடுங்கன வரைக்கும் லாபம்இதுதாண்டா தமிழ் பத்திரிகைதமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்-பதிவில்//

அவ்ர்களாவது பரவாயில்லை.

.மதிமாறன் என்றாவது ஈழப் போராட்டம் பற்றியும்,அவர்களின் போராட்டத்திற்க்கான தேவை குறித்தும் ஒரு வரி எழுதி இருக்கிறாரா?போனது போகட்டும்.இப்பொழுதாவது பதில் சொல்லட்டும். எதிலும் மூக்கை நுழைத்துக் கருத்து சொல்லும் மதிமாறன் அவர்களே முதலில் இதில் கருத்துச் சொல்லுங்கள்!

அ)விடுதலைப் புலிகள் குறித்து மதிமாறன் கருத்து என்ன?

ஆ)விடுதலைப்புலிகள் நடத்தும் ஆயுதப் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சும்மா வெட்டியாக வழவழ வார்த்தைகளில் முற்போக்கு பேச வேண்டாம்.பளிச்சென்று சொல்லுங்கள்.இதில் உங்கள் கருத்து என்ன?

//சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கிறதுஎன்று ஆதாரத்தோடு எழுதிய, சிங்களப் பத்திரிகையாளர்களை சிங்கள அரசு கொன்றது. தமிழர்களுக்காக மனிதாபிமானம் கொண்ட அந்தசிங்களவர்கள்தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.///

மதிமாறன்அறிவுப்படி சிங்களர்கள் மட்டுமே போராடினார்கள்.தமிழர்கள் சும்மா கிடந்தார்கள். தமிழ்ப் பத்திரிக்கைகள் சோரம் போனார்கள்.நம் கேள்வியெல்லாம், மதிமாறன் என்ன தியாகம் செய்தார்?மதிமாறன் எதுவுமே பண்ணலையே?இவ்வளவு ஏன்?மதிமாறன் தினகரனில் வேலை பார்க்கும் போது அப்பொழுது நாட்டில் நிகழும் பிரச்சனை குறித்து ஏதாவது புரட்சிகர கட்டுரை எழுதி உள்ளாரா?இல்லை புரட்சிகரச் செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளாரா?பதில் தேவை அய்யா!பதில் தேவை!

//ம.கஇகவின் கை ஆள் மதிமாறன்’ ‘( மதிமாறன் எப்பவுமே இப்படித்தான் அவரே உண்மையை ஒத்துக்குவாரு) இப்பதான் மதிமாறனுக்கு சாதி குறித்து தெரியுதா?நாங்க எல்லாம் இரண்டாயிரம் வருசத்துக்கு முந்தியே சாதிய எதிர்த்தவங்கஅப்ப எங்க போயிருந்தார் மதிமாறன்?‘ ‘இந்திய உளவு நிறுவனத்தின் கை ஆள் மதிமாறன்என்று அரசியல் விளக்கமே இல்லாமல், தங்கள் இயலாமையை கோபமாக, கிசு கிசு பாணியில் தனிப்பட்ட முறையில் என் மீது மண்ணை வாரி தூற்றுவதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல?//

கண்டிப்பாக அவதூறுக்கு பதில் சொல்லத் தேவை இல்லை.ஆனால் கண்டிப்பாக குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லத் தான் வேண்டும்.சாதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் சாதி ஒழிப்பாளர் மதிமாறன் அவர்களின் கருத்து என்ன?சாதி ஒழிப்புக்கு மதிமாறன் அவர்களின் பங்களிப்பு என்ன?கண்டிப்பாக எழுதபக்கங்கள் போதாது..ஆனால் கண்டிப்பாக ஒரு வரி எழுதணும்.அது தனிப்பட்ட வாழ்வில் நடைபெற்றதாக இருத்தல் சிறப்பு.ஆனால் அப்படி இருக்காது.ஏனென்றால் எதுவும்போராளிபண்ணவில்லை. வாய்ச்சொல்லில் வீரரடி.என்பது யாருக்கு பொருந்துமோ இல்லை போராளிக்கு கண்டிப்பாக பொருந்தும்.

//ஒரு பெரியார் தொண்டனின் பார்வையில், டாக்டர் அம்பேத்கர் குறித்து நான் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள், அந்தப் புத்தகத்திற்கு விழா எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அவர்களே விழா தேதியையும் சிறப்பு விருந்தினர்களையும் முடிவு செய்து அறிவித்தனர். எல்லோருக்கும் விழா பற்றி எப்போது தெரியுமோ அப்போதுதான் எனக்கும் தெரியும்.//

இதன் மூலம் சகலருக்கும் மதிமாறன் மறைமுகமாக சொல்வது அல்லது சொல்ல விரும்புவது அல்லது தன்னை நோக்கி அனைவரும் கேட்கப்படும் அல்லது கேட்க நினைக்கும், சீமானின் தமிழ் தேசியம் உங்களுக்குப் பிடிக்காது,ஆனால் அவரை ஏன் நீங்கள் விழாவிற்கு அழைத்தீர்கள்,புத்தகம் விற்பனை செய்யும் கீழ்த்தரமான நோக்கம் தானே?என்ற கேள்விக்கான மறைமுகமான பதில் தான் மேலே சொல்லப்பட்டது. ஆனால் இதன் மூலம் நேரடியாக சொல்வது என்னவென்றால், சீமானின் தமிழ் தேசியத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.அதில் நம்பிக்கையும் கிடையாது.ஆனால் நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டாளர்கள் அவரை அழைத்தார்கள்.என்னையும் அழைத்தார்கள்.கலந்து கொண்டேன்.அவ்வளவு தான்.மற்றபடி அவருக்கும் எனக்கும் கொள்கை அளவில் நிறைய வேறுபாடு உண்டு.இது தான் இதைத் தான் இன்னும் கொஞ்ச நாளில் மதிமாறன் வெளிப்படையாகவும், ”வீரமாகவும்பேசுவார்.இப்பொழுது துளியும் மறந்தும் கூட வெளிப்படையாக கூட பேச மாட்டார்.ஏனென்றால் நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்கணுமே?சீமானை வைத்து புத்தகம் விக்கனணுமே?புத்தகம் விற்பதற்கு சீமானும் மணி அண்ணணும்.ஆனால் சேர்ந்து திட்டுவதற்கு ம.க.இ.ககாரன்.நல்லாத்தான் நடக்குது மதிமாறன் அவர்களின் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்சி வியாபாரம்.

இந்த விஷயத்தில் நமக்கு எழும் சில சந்தேகங்கள்.

அ)கொளத்தூர் மணியின் கருத்தும் மதிமாறன் கருத்தும் ஏற்கனவே கடந்த தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிப்பதில் வேறுபடுகிறது.அது குறித்து தனது கருத்தை மதிமாறன் பிளாக்கில் பதிவு பண்ணி விட்டார்.அது குறித்து தலைவருடன் நேரடியாக விவாதம் பண்ணுவதற்கு மதிமாறன் தயாரா?பதில் சொல்லுங்கள்மதிமாறன் அவர்களே?

ஆ)கூட்டத்தின் மற்றொரு சிறப்பு விருந்தினர் சீமான் பேசும் தமிழ் தேசியம் பற்றியும் அவரது நாம் தமிழர் இயக்கம் பற்றியும் மதிமாறனின் கருத்து என்ன?

இ)விடுதலைப் புலிகள் பற்றி புர்ர்ர்ர்ரட்சிகர எழுத்தாளரின் கருத்து என்ன?சீமானின் தலைவர் பிரபாகரன் பற்றி மதிமாறன் கருத்து என்ன?ம.க.இ.க வின் கருத்தில் இருந்து மதிமாறன் கருத்து வேறுபடுகிறதா,இல்லை மதிமாறனின் கருத்தும் அதுவும் ஒன்றா?ஒருவேளை மதிமாறன் கருத்து சீமானின் கருத்துடன் வேறுபட்டால் அது குறித்து விவாதம் பண்ண மதிமாறன் தயாரா?விவாதத்திற்கு மும்பை விழா மேடையை பயன்படுத்த மதிமாறனின்பினாமிநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தயாரா?

ஈ)கொள்கை உடன்பாடு இல்லாத சீமானுடன் ஏன் கலந்து கொண்டீர்கள் என்று எழும் கேள்விக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னையும் அழைத்தார்கள்,சீமானையும் அழைத்தார்கள்.மற்றபடி எனக்கு ஒன்றும் தெரியாது என்று படு முன் எச்சரிக்கையாகப் பதிலைத் தயாராக வைத்துக் கொண்டு பேசும் மதிமாறனிடம் ஒரு கேள்வி இருக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ராமகோபாலனையோ அல்லது இல.கணேசனையோ அழைத்தாலும் இதே பதிலைத்தான் சொல்வீர்களா?அவ்வளவு ஏன்? ஏ.சி.சண்முகம் முதலியார் அவர்களை அழைத்தாலும் இதே பதிலைத்தான் சொல்வீர்களா?

முற்றிலும் மாற்றுக்கருத்து கொண்டவர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது குறித்த உங்கள் கருத்து என்ன?பதில் சொஅல்லுங்கள் அய்யா!பதில் சொல்லுங்கள்!

//தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக இடஒதுக்கீடு, இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்று விஸ்வரூபம் எடுத்து நின்ற டாக்டர் அம்பேத்கரை விமர்சிக்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள் அல்லது அவரை கொண்டாட மறுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம், இந்திய தேசியமா? அல்லது அவர்கள் மனதில் இருக்கிற இந்து ஜாதியமா?//

மதிமாறன் எடுத்ததெற்கெல்லாம் தலித்,அம்பேத்கார் என்று சவடால் பேசித் திரிகிறார்.தமிழ் தேசியவாதிகள் அம்பேத்காரை புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லித் திரியும் மதிமாறன் முதலில் அந்தக் கேள்வியை ம.க.இ.க.வினரை நோக்கிக் கேட்கட்டும்.அவர்கள் ஏன் அம்பேத்காரை ஏற்றுக் கொள்வது இல்லை? என்று கேளுங்கள்.உங்களைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டு அது அப்படி இல்லை தோழர் என்று ஆரம்பிப்பார்கள்,அதன் பின்பு இந்த விவாதம் மணிக்கணக்கில் விடிந்த பின்பும் நீண்டு கொண்டுடுடுடுடுடுடு விடையும் தெரியாமல் கேட்ட கேள்வியே மறந்து,நீங்களும் வீட்டுக்கு போக முடியாது தோழர்.ஆகவே முதலில் அவர்களை முதலில் கேள்வி கேட்டு பதில் பெறுங்கள் தோழர்!அதன் பின்பு தமிழ் தேசிய வாதிகளை ஏன்? என்று பின்னிப் பெடலெடுப்போம் தோழர்!

ஆகவே ஊரெல்லாம் கேள்வி கேட்கும் மதிமாறன் முதலில் மேற்கண்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்கள்.அல்லது உண்மைகளை ஒத்துக்கொள்ளுங்கள்.அதன் பின்பு மற்றவை பேசுவோம்.இந்த கேள்விக்கு பதில் சொல்லப்படவில்லை என்றால் மதிமாறன் கட்டிடம் ஸ்ட்ராங்கு பட் பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்க்கு என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கும்....

Wednesday, September 9, 2009

அக்கப்போர் ஓய்ந்தது…மதிமாறன் நிகழ்ச்சிக்கு சீமான் டாட்டா…

கடந்த ஒரு மாதமாக வலைப்பதிவு அக்கப்போர் எழுத்தாளர்களால் வெட்டியாகவும் செயற்கையாகவும் விவாதிக்கப்பட்டு வந்த புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்ட்சி எழுத்தாளர் மதிமாறனின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அண்ணன் சீமான் வருவாரா?மாட்டரா?என்று ஒரே அக்கப்போர் நடைபெற்றது.புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்சியாளர் ரேஞ்சுக்கு மதிமாறனை பில்டப் கொடுத்தார்கள்.

இது எதுக்குடா வம்பு என்று அண்ணண் சீமானுக்கே போனைப் போட்டோம்.அவர் எடுக்க வில்லை.உடனே அவரது அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினோம்.பதில் கிடைத்தது.அதை அப்படியே வெளியிட்டுள்ளோம்.

இப்பொழுது சொல்வது என்னவென்றால் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்சி எழுத்தாளர் நிகழ்ச்சிக்கு அண்ணண் சீமான் போக வில்லை.இனியாவது அவரவர் வேலையைப் பாருங்கப்பா>>>>>>>>

>

சீமானின் நிகழ்ச்சி நிரல்

InboxX

Reply

Muruka pupathy

to naamtamizhar

show details Sep 7 (3 days ago)

மதிப்புடையீர்,

நாம் தமிழர் இயக்கம்.சென்னை.

நான் சீமானின் தீவிர ரசிகன்.நான் சீமான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

”பெரியாரின் தொண்டனின் பார்வையில் டாக்டர் அம்பேதகர் குறித்து மதிமாறன் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள் மும்பையில் அக்டோபரில் நடத்தும் விழாவுக்கு சீமான் கலந்து கொள்கிறாரா?என்று தெளிவு பெற விரும்புகிறோம்.பதில் அனுப்பவும்.

இப்படிக்கு,

முருக பூபதி.

ReplyForward

Reply

நாம் தமிழர்

to me

show details Sep 7 (2 days ago)

மதிப்புடையீர்,

வணக்கம்.எங்கள் தலைவர் சீமான் மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வத்திற்கு நன்றி.நீங்கள் குறிப்பிடும் அந்த நிகழ்ச்சியில் தலைவர் கலந்

து கொள்வது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.ஆனால் எங்கள் தலைவர் அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து 28 ஆம் நாள் வரை ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அது குறித்த பயணம் உறுதி செய்யப்பட்டு விட்டது.பயணச் சீட்டும் வந்து விட்டது.அது மட்டுமே எங்களுக்குத் தெரியும்.மற்ற உறுதி செய்யப்படாத நிகழ்ச்சிகள் பற்றி எங்களிடம் தகவல் எதும் இல்லை.

நன்றி.

நாம் தமிழர் இயக்கம்.

- Show quoted text -

ReplyForwardInvite நாம் தமிழர் to chat

Thursday, September 3, 2009

பாண்டிமட எழுத்தாளரின் பஜனை

தனக்குத்தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக்கொள்ளும் எழுத்தாளரின் சமீபத்திய கேள்வியும் அதற்கான பதிலையும் படித்தபோது புல்லரிப்பே வந்துவிட்டது.

அந்த கேள்வி இதுதான் நீங்கள் ஏன் உங்களைப் பற்றிய விமர்சன கட்டுரைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்வதில்லை ?

நம் எழுத்தாளர் சொல்லியிருக்கும் பதிலை பார்த்தவுடன் உடனே அதற்கு ஒரு மறுமொழி எழுதாவிட்டால் பாரதி கல்லறையில் இருந்து எழுந்து வந்து நம்மை உதைத்துவிடுவார் என்று கருதியதால் இந்த பதிவு. :))

மறுப்பு சொல்ல வேண்டிய அளவுக்கு அருகதை இல்லாததால்இவர் பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லையாம்.

விமர்சிக்க கூட தகுதியற்ற அவரின் எழுத்துக்களுக்கு இந்த அளவுக்கு மெனக்கெட்டு முக்கியத்துவம் கொடுத்து பின்னூட்டம் போடும் அப்பாவிகளை நினைக்கத்தான் நமக்கு கவலையாக இருக்கிறது.
( பின்னூட்டம் இட கூட தகுதி இல்லாத பதிவு என்பது வேறு விஷயம்)
அடடா இப்போதுதான் நினைவுக்கு வருகிறது பெரும்பாலான பின்னூட்டங்களையும் அவரே போட்டுக்கொள்வதை மறந்துபோய்விட்டோம்!!

கிசுகிசுத்தனமாக அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்களைநாமும் தவிர்த்துவிட்டு சில விசயங்களை பார்க்கலாம்.

ம.க.இ.க வி.ன் கையாள் மதிமாறன் என்று இவரை திட்டுகிறார்களாம் அட பெருமைப்பட்டுக்கொணடு இருக்க வேண்டிய விசயத்துக்கு போய் ஏன் இவர் அலுத்துக்கொள்ளுகிறார்.
உலகத்திலேயே தங்களை விட புர்ர்ரர்ச்ச்ச்சீகாரர்கள் இல்லை, என்றுசொல்லும் மருதையன் கலை இலக்கிய கழகத்துக்கு ஏஜெண்டாக இருப்பது எவ்வளவு பெருமிதத்துக்குறிய விசயம்.

அதைவிட்டுட்டு இப்படி மெகா சீரியல் ஹீரோயின் போல கண்ணை கசக்கிகிட்டு இருக்காரே நம்ம எழுத்தாளார்.

பெரியாரின் தொண்டனின் பார்வையில் டாக்டர் அம்பேதகர் குறித்து இவர் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள் விழா எடுக்க முடிவு செய்து இவருக்கு சிறப்பு விருந்தினர்களையும் அறிவித்தார்களாம்.

யார் அந்த அப்பாவிகள் எந்த பள்ளியில் எத்தனாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்களோ யாமறியேன் பாராபரமே!!

என் இனிய நண்பர்களே கொளத்தூர் மணியிடமும் சீமானிடமும்போய் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக புலம்பிவிட்டு !!
ஆண்டவனே என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்றுஎதிரிகளை நானாக கவனித்துக் கொள்ளுகிறேன் என்று ஒரு இறை நமபிக்கையாளர் புலம்பியதுபோல தானும் புலம்ப முடியுமா என்று கேட்கிறார்.

என் இனிய நண்பர்களே என்று எதிரிகளை விளிக்கும் இவருக்குநண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்று அந்த ஆண்டவன் குழம்பிபோய் கோவணத்தை அவிழ்த்துக்கொண்டு திரியாமல்இருந்தால் சரி.

பேசாத எழுதாத விசயத்துக்கு வலிந்துபோய் கொளத்தூர் மணியிடமும் சீமானிடமும் விளக்கம் கொடுக்க விரும்பாத இவர் ஏன் பதிவு எழுதி தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ?

கொஞசம் ம.க.இ.க கொஞசம் பெரியார் கொஞ்சம் அம்பேத்கர்என்று லவட்டிப்போட்டி சுயசிந்தனையின் அடையாளமே இல்லாத இவரின் எழுத்துக்களுக்கு அரசியல் ரீதியானவிமர்சனம் செய்ய இயலாதவர்கள் காழ்ப்புணர்சியால்வதந்தியை பரப்புகிறார்களாம்? பொறாமை உணர்வு நெருங்கிய நண்பர்களிடமும் உறவினர்களிடமும்தான் வேலை செய்யுமாம்.

முதலில் சுயபச்சாதாபத்தையும் கழிவிரக்கத்தையும்தவிர்த்துவிட்டு உண்மையாக வளர முயற்சி செய்யுங்க எழுத்தாளரே
பாரதிக்கே மறுப்பு எழுதிய எனக்கு இவர்களுக்கு மறுப்புஎழுதுவதா முடியாது என்று ஒரு சவடால் வேறு அடிக்கிறார்?

செத்து போனவர் திரும்ப வந்து மறுப்புக்கு மறுப்பு எழுத மாட்டார் என்கிற தைரியம் தானே மதிமாறரே ?

நல்ல வேளை பாரதியோடு நிறுத்தி கொண்டார். ,கே.பி . சுந்தராம்பாளை இழுக்கவில்லை. ( சுந்தராம்பாளை அம்பல படுத்திய (?) பதிவு உலக பிரசித்தி பெற்றது )

மறுப்பு என்பது ஒரு நபரின் கருத்தையோ கட்டுரையையோ மறுத்துஎழுதுவது.

ஆய்வு என்பது புறநிலை பார்வையுடன் ஒரு எழுத்தாளரின் கருத்துகளைஆய்வு செய்து நிறை குறைகளை அலசி முன்வைப்பது.

பாரதியை ஆய்வு செய்தாரா? பாரதிக்கு மறுப்பு எழுதினாரா இவர் ?இவருக்கே குழப்பம் இன்னும் தீரவில்லை போல இருக்கிறது.
செத்துபோனவருக்கு மறுப்பு எழுதும் உங்கள் துணிவை எப்படிபாராட்டினாலும் தகும் எழுத்தாளரே!!

தந்தை பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவதூறு பரப்பினார்கள். ஆனால் அவைகளை ஒரு பொறுட்டாகவே மதித்ததில்லை தலைவர் பெரியார்.
பெரியாரை ‘தமிழனல்ல கன்னடன்’ என்று தமிழ்த்தேசியவதிகள், தமிழறிஞர்கள் அவதூறு செய்தபோது மட்டும் தலைவர் இப்படிக் கேட்டார்:

“தமிழர்களே! அட, மானங்கெட்ட தமிழர்களே! முதன் முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் ஒரு மலையாளி டி.எம். நாயர். அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கி தன் பொருளையெல்லாம் இழந்தவன் ஒரு தெலுங்கன் சர்.பி.தியாகராய செட்டியார். தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள்?”

-விடுதலை நாளிதழ் -

இந்த துணிச்சல், நேர்மை யாருக்கு வரும்?

தமிழர்களை ஏமாற்றி,‘தமிழா நீ ஆண்ட பரம்பரை. இன்று அடிமைப்பட்டு கிடக்கிறாய்’ ‘தமிழ் இனம் உலகத்தின் மூத்த இனம்’ ‘தமிழ் என் மூச்சு’ என்றெல்லாம் ஏற்றி பேசி, தமிழர்களிடம் செல்வாக்கு பெற்று, தலைவனாக மாறி நாட்டையே பிடித்தவர்கள் மத்தியில், தமிழர்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதை போன்ற இப்படி ஒரு பதிலை தலைவர் பெரியாரைத் தவிர வேறு யாரால் தர முடியும்?

உங்களாலும் கொடுக்க முடியும் என்று சொல்லிஉங்களைப் பெரியாரின் இடத்தில் வைத்து பெருமைப்படத் துடிக்கிறீர்களா?

அற்பவாதி, லும்பன், மாங்காமடையன், மாமா பையன் என்கிற வார்த்தையை whole sale-ல் டீலர் எடுத்து ஸ்டாம்பேடில் குத்தி on the way -ல் போகிற வருகிறவர்களுக்கு எல்லாம் இலவசமாக குத்திகொண்டிருக்கும் ம.க.இ.க வினரை பக்கத்தில் வைத்துக்கொண்டு இப்படிபேச உங்களுக்கு எவ்வளவு தைரியம்?

தனக்கு வசதியாக அம்பேத்கரை இவர் இழுப்பதைக் கண்டுதான் நமக்கு கோபம் ஏற்ப்படுகிறது.

ஒரு அனாமதேய ஆத்மாவாக இல்லாமல் மாகாத்மாவேஎனக்கு எதிராளியாக இருப்பதால் அவர் முன்வைத்தவழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்று அம்பேத்கர் கூறியதை தனக்கு துணையாக அழைக்கிறார்.

யார் வேண்டுமானாலும் துண்டுச்சீட்டில் கேள்வி எழுதிக்கொடுங்கள் என்று கூட்டங்களில் அறிவித்து வரும் கேள்விகளுக்கு பெரியார் பதில் சொன்னது நமக்கு தெரியும். வரும் கேள்விகள் அணைத்தும் நேர்மையானதாக இருந்தது என்று கூற முடியாது.ஆனால் அத்தனைக்கும் பதில்சொல்லிக்கொண்டிருந்தார் பெரியார்.

இந்த பெரியார் தொண்டர் அம்பேத்கரைப் பற்றி என்ன எழுதியிருப்பார் என்று நினைக்கையில் தலைசுற்றலே வந்துவிடுகிறது.

எழுத்தாளர் அம்பேத்கார் பாதை , பெரியார் பாதை, எல்லாம் பின்பற்றட்டும் ஆனால் அவரது பதிவை படித்துவிட்டு “ எங்கே செல்லும் இந்த பாதை” யை நோக்கி வாசகர்கள் செல்லவேண்டிய காலம் வெகு தூரம் இல்லை.
வெவ்வேறு சூழ்நிலைகளில் தங்கள் ஆளுமைகளுக்கும்தனிப்பட்ட கொள்கைகளுக்கும் ஏற்ப் நடந்துகொண்டபெரியார்,மற்றும் அம்பேத்கரின் கருத்துக்களைதனது வசதிக்கு ஏற்ப பயன்படுத்த முயலுவதில்கூட தோல்வி காணும் நம் மதிமாறர்ர் என்ற வீரர், தீரர் , சூரரை பாண்டிமட பஜனை எழுத்தாளர் என்று அழைத்தது தவறே இல்லை என்கிற முடிவுக்குதான் வந்துசேர முடிகிறது.

குறிப்பு ) :-
என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா என்று வரும் நன்பர்களும் ”தோலர்”களும் பின்னூட்டம் இடலாம்.

Tuesday, September 1, 2009

இது தாண்டா இந்திய தேசிய புரச்ச்ச்சீ

பாரதிய கிழி,
பார்ப்பான ஒழி,
காந்திய அம்மணமாக்கு,
கிருஷ்ணன போட்டு தாக்கு,
பொழப்பு இல்லைனா பிளாக் எழுது,
உனக்கு புரியாம 4 கவித எழுது,
எனக்கும் புரியாம 5 பதிவு போடு,
ஆப்பிரிக்கா டீவி க்கு பேட்டிய குடு
அத அப்படியே கேசட்டு போடு,
கேள்வி பதில் பதிவு எழுது,
மறக்காம கேள்விய நீயே கேளு,
திராவிடன கேள்வி கேளு,
தமிழன் மூஞ்சில கரிய பூசு,
இந்தியன நாறடி,
விக்கலைனாலும் 6 புக் எழுது,
முன்னுரை கேவலம்ன்னு சொல்லு,
விளம்பரத்துக்கு பெரிய தலைய புடி,
உலக புரச்சிக்கு காப்பிரைட் வாங்கின ம.க.இ.க
கூட சேந்து பல்ல இளி
தமிழன அழி,
வர்க்கம் பேசு,
முதலாளித்துவம் , ஏகாதிபத்தியம்ன்னு ஒளரு
அம்பேத்கர brand பண்ணு
பெரியார கூட சேத்துக்கோ
மொக்கையா எழுது
ஒன்னும் இல்லைனா மீள்பதிவு போடு

இப்படியே பண்ணு – மச்சி
வந்துடுச்சுடா இந்திய தேசிய புரச்சி


பெயரில் மதி சேர்த்து கொண்டு எழுத்தில் சுதி இல்லாத என் தங்க தலைவனுக்கு

Saturday, August 29, 2009

நான்

1997 ஆம் ஆண்டு எழுதி முடித்து அப்புறம் போனியாகாமல் அனைவருக்கு இலவசமாய் கொடுத்தாலும் படிக்க முடியாத ”வாந்தியாகி வயித்துகடுப்பாகி அப்பால பேதியாகி” என்ற என்னுடைய முதல் கிறுக்கலில் “வாழ்த்துரை’ என்ற தலைப்பில் இப்படி எழுதியிருந்தேன்:
“எனக்குத் தெரிந்த பிஸ்கோத்துகளிடம் என்னையும் என் எழுத்தையும் புகழ்ந்து எழுதி வாங்கி என் புத்தகத்திலேயே பிரசுரித்துக்கொள்வதற்கு
3X2 செ.மி. - Rs1000,
6X4செ.மி. - Rs2000, என வாங்கி புத்தக செலவை ஈடுகட்ட நினைத்தேன்.ஓசியேலே அணிந்துரை, புகழுரை எழுதி காலம் தள்ளும் கன்றாவிகளிடம் என்னை பற்றியும் என் சிந்தனை வளத்தை பற்றியும் என்னுடைய புத்தகத்தில் போட்டுக் கொள்வதையே வெட்கமாக கருதிய நான், என்னைப் புகழ்ந்து நானே எழுதிக்கொண்டு ’நான்’ நானாகவே இருக்கிறேன்

எனது புத்தகங்கள் :-

வாந்தியாகி வயித்துகடுப்பாகி அப்பால பேதியாகி

பாரதி ஈய, பித்தளை, சொம்பு பார்ட்டி

நான் எனக்கு ராஜா - எனக்கு நானே ராஜா

லபக்கு தாசிடம் கேளுங்கள் - பார்ட் 1

லபக்கு தாசிடம் கேளுங்கள் - பார்ட் 2

லபக்கு தாசிடம் கேளுங்கள் - பார்ட் 3